சேமமுற வேண்டுமெனில் தெருவெல்லாம் தமிழ் முழக்கம் செய்தல் வேண்டும்!
சுப்ரமணிய பாரதிஆடுவோமே பள்ளுப் பாடுவோமே ஆனந்த சுதந்திரம் அடைந்துவிட்டோம் என்று.
சுப்ரமணிய பாரதிவீர சுதந்திரம் வேண்டி நின்றார் பின்னர் வேறொன்று கொள்வாரோ? - என்றும் ஆரமுது உண்ணுதற்கு ஆசைகொண்டார் கள்ளில் அறிவைச் செலுத்து வாரோ?
சுப்ரமணிய பாரதிதண்ணீர் விட்டோ வளர்த்தோம்? சர்வேசா! இப்பயிரைக் கண்ணீரால் காத்தோம்.
சுப்ரமணிய பாரதிஎன்று தணியும் இந்தச் சுதந்திர தாகம்? என்று மடியும் எங்கள் அடிமையின் மோகம்?
சுப்ரமணிய பாரதிவிடுதலை ! விடுதலை ! விடுதலை ! பறைய ருக்கும் இங்கு தீயர், புலைய ருக்கும் விடுதலை, பரவ ரோடு குறவ ருக்கும் மறவ ருக்கும் விடுதலை!
சுப்ரமணிய பாரதிசுதந்திர தேவி! நின்னைத் தொழுதிடல் மறக்கிலேனே
சுப்ரமணிய பாரதிபாமரராய் விலங்குகளாய், உலகனைத்தும் இகழ்ச்சி சொலப் பான்மை கெட்டு நாமமது தமிழரெனக் கொண்டிங்கு வாழ்ந்திடுதல் நன்றோ? சொல்லீர்.
சுப்ரமணிய பாரதிஆழ்ந்த நினைப்பு, அசையாத நினைப்பு, வலிய நினைப்பு, மாறாத நினைப்பு விரைவில் உலகம் அறியத்தக்க வெளியுண்மையாக மாறிவிடும்.
சுப்ரமணிய பாரதிசொல்லில் உயர்வு தமிழ்ச் சொல்லே அதைத் தொழுது படித்தடடி பாப்பா.
சுப்ரமணிய பாரதிஇறவாத புகழுடைய புது நூல்கள் தமிழ் மொழியில் இயற்றல் வேண்டும் மறைவாக நமக்குள்ளே பழங்கதைகள் சொல்வதிலோர் மகிமை இல்லை.
சுப்ரமணிய பாரதி