நமக்குள் அடக்கபடாத உணர்வுகளை நேசிக்கும் தைரியம் ஒரு சிலருக்கு எப்போதும் இருக்கும். அந்த மனிதர்களில் ஒருவர் என் தந்தை.
அலிசன் லோமன்ஒரு தந்தையின் கண்ணீரும் பயமும் கண்ணுக்குத் தெரிவதில்லை, தந்தையின் அன்பு வெளிப்படுத்தப்படாதது, ஆனால் அவருடைய கவனிப்பும் பாதுகாப்பும் வலிமையின் தூணாக நம் வாழ்நாள் முழுவதும் தொடர்கிறது.
ஆமா எச்.வன்னியாராச்சிமின்மினிப்பூச்சியை போல நீங்கள் என்னை உணரச் செய்கிறீர்கள். காதல் பசியுடன் கண்ணாடி குடுவையில் அடைபட்ட மின்மினி பூச்சியைப்போல.
ஆயுஷி கோஷல்நாம் அனைவரும் விநோதமானவர்களே, வாழ்க்கையும் விநோதமானதுதான். நம் விநோதங்களுடன் ஒத்துப்போகும் ஒருவரை காணும்போது ஏற்படுவதே காதல்.
டாக்டர் சியூஸ்இறுதியாக உங்கள் வாழ்க்கை, கனவைவிட சுகமாய் இருக்கும்போது நீங்கள் காதலிப்பதை அறியலாம்.
டாக்டர் சியூஸ்உங்களை உண்மையாக அறிந்து நீங்கள் அப்படி இருப்பதற்காக உங்களிடம் அன்பு கொண்டவன் நண்பன்.
எல்பர்ட் ஹப்பார்ட்வாழ்க்கையில் ஒரே ஒரு மகிழ்ச்சிதான் உள்ளது, அது காதலிப்பதும் காதலிக்கப்படுவதும்தான்.
ஜார்ஜ் சான்ட்நீ என்னை நினைவில் வைத்திருந்தால், இவ்வுலகமே மறந்தாலும் எனக்கு கவலையில்லை.
அருக்கி முரகாமிதனியாக வெளிச்சத்தில் நடப்பதை விட நண்பனுடன் இருட்டில் நடப்பது சிறந்தது.
ஹெலன் கெல்லர்இதயத்திற்கு எப்போதும் தேவை ஒரு நண்பன் மட்டுமே.
ஹென்றி வான் டைக்எதிரியை நண்பனாக மாற்றும் சக்தி அன்பிற்க்கு மட்டுமே.
மார்ட்டின் லூதர் கிங் ஜூனியர்காதல் உங்களுடன் வாழ ஒருவரை கண்டுபிடிப்பதல்ல. அவர் இல்லாமல் நீங்கள் வாழமுடியாத ஒருவரை கண்டுபிடிப்பது.
மொண்டனீஸ் ரபேல் ஒர்டிஸ்நாம் நம்முடன் இருக்கும் நபர்களிடம் அன்பு செலுத்த முடியாமல் போனால் நம்மால் பார்க்க முடியாத கடவுளிடம் எப்படி அன்பு செலுத்த முடியும்?
அன்னை தெரசாஎப்பொழுதும் ஒருவரை ஒருவர் புன்னகையுடன் சந்திப்போம், ஏனென்றால் புன்னகை அன்பின் ஆரம்பம்.
அன்னை தெரசாநீங்கள் செல்லும் இடமெல்லாம் அன்பைப் பரப்புங்கள். உங்களிடம் வந்தவர்கள் யாரும் மகிழ்ச்சியின்றி திரும்ப வேண்டாம்.
அன்னை தெரசாஅன்பு என்பது அனைத்து பருவங்களிலும் கைக்கெட்டும் தூரத்தில் கிடைக்கக்கூடிய ஒரு பழம்
அன்னை தெரசாவறுமை என்பதுஉண்ண உணவின்றி, உடுத்த துணியின்றி, வசிக்க வீடின்றி இருப்பது மட்டுமே என்று சில நேரங்களில் நாம் நினைக்கிறோம். யாருக்கும் தேவைப்படாமல், யாராலும் விரும்பப்படாமல், யாராலும் கவனிக்கப்படாமல் இருப்பதே வறுமையிலும் மிகப்பெரிய வறுமை.
அன்னை தெரசாரொட்டிக்கான பசியை விட அன்பின் பசியை அகற்றுவது மிகவும் கடினம்.
அன்னை தெரசாபணம் மட்டும் கொடுத்து திருப்தி அடைய வேண்டாம். பணம் மட்டும் போதாது, அவர்கள் நேசிக்கப்பட உங்கள் இதயம் அவர்களுக்கு தேவை. எனவே, நீங்கள் செல்லும் இடமெல்லாம் உங்கள் அன்பைப் பரப்புங்கள்.
அன்னை தெரசாதனிமையும் தேவையற்ற உணர்வும் மிகக் கொடிய வறுமை.
அன்னை தெரசாஇன்றைய மிகப்பெரிய நோய் தொழுநோயோ காசநோயோ அல்ல, மாறாக யாருக்கும் தேவையற்றர் என்ற உணர்வே.
அன்னை தெரசாபணக்காரர்கள் கூட அன்பிற்காகவும், கவனிப்பதற்காகவும், விரும்பப்படுவதற்காகவும், சொந்தம் என்று அழைக்கப்படுபவதற்கும் ஏக்கத்துடன் காத்திருக்கிறார்கள்.
அன்னை தெரசாகாதல் என்பது காற்றைப் போன்றது, அதை உங்களால் பார்க்க முடியாது ஆனால் உணர முடியும்.
நிக்கோலஸ் ஸ்பார்க்ஸ்நாம் தனியாக பிறந்தோம், தனியாக வாழ்கிறோம், தனியாக சாகிறோம். காதல் மற்றும் நட்பின் மூலம் மட்டுமே நாம் தனியாக இல்லை என்ற மாயையை உருவாக்க முடியும்.
ஆர்சன் வெல்லஸ்பெண்கள் அன்பு செலுத்தப்பட வேண்டியவர்கள், புரிந்து கொள்ளப்பட வேண்டியவர்கள் அல்ல
ஆஸ்கர் வைல்ட்பைத்தியக்காரத்தனமாக இல்லாதபோது, அது காதல் அல்ல.
பெட்ரோ கால்டெரோன் டி லா பார்காயாராவது உங்களை காதலிக்கும்வரை நீங்கள் யார் அல்லது எப்படி இருக்கிறீர்கள் என்பது பொருட்டல்ல.
ரோல்ட் டால்காதல் என்பது கட்டுப்படாமல் இருப்பதற்கான கட்டுப்படுத்த முடியாத ஆசை.
இராபர்ட் புரொஸ்ட்உங்கள் தாயின் அன்புக்கு உங்களுக்கு தகுதி தேவையில்லை. ஆனால் தந்தைக்கு அப்படியல்ல.
இராபர்ட் புரொஸ்ட்காதலில் விழுவது மெழுகுவர்த்தியைப் கையில் வைத்திருப்பதை போன்றது. தொடக்கத்தில் அது உங்களைச் சுற்றியுள்ள உலகத்தை ஒளிரச் செய்கிறது. பின்னர் உருக ஆரம்பித்து உங்களை காயப்படுத்துகிறது. இறுதியாக எல்லாம் இருட்டாகி, காயம் மட்டும் மிஞ்சுகிறது!
சையத் அர்ஷத்உங்களுக்கு ஒரு உண்மையான நண்பன் இருந்தால், உங்கள் பங்கை விட நீங்கள் பெறுவதே அதிகம்.
தாமஸ் புல்லர்இங்கு தெரியாதவர்கள் என்று யாரும் இல்லை, சந்திக்காத நண்பர்கள் மட்டுமே உண்டு.
வில்லியம் பட்லர் யீட்ஸ்காதலிக்கலாமா என்று சிந்திப்பவர்கள், சன்யாசம் வாங்கிக் கொள்ளலாமா என்று யோசிப்பவர்கள், தற்கொலை செய்து கொள்ளலாமா என்று ஆராய்பவர்கள் எல்லாரும் ஒரே ரகம். நினைப்போடு சரி.
யுகியோ மிஷிமாதிருமணம் உண்மையில் இதயத்தில் நடைபெறுகிறது, வீட்டிலோ கோவிலிலோ அல்ல. அது நீங்கள் தொடர்ந்து எடுக்கும் தொடர் முடிவுகளே. அந்தத் முடிவுகள் உங்கள் கணவன் அல்லது மனைவியை நீங்கள் நடத்தும் விதத்தில் பிரதிபலிக்கிறது.
பார்பரா டி ஏஞ்சலிஸ்உண்மையான நண்பனைக் கொண்டவன் மகிழ்ச்சியானவன், தன் மனைவியிடம் அந்த உண்மையான நட்பைக் காண்பவன் பெருமகிழ்ச்சியானவன்.
ஃபிரான்ஸ் ஷூபர்ட்நீங்கள் இருவரும் எவ்வளவு சவால்களை எதிர்கொண்டாலும், உங்கள் இருவருக்கும் திருமணத்தின் மீதும், ஒருவருக்கு ஒருவர் மீதும் நம்பிக்கை இருந்தால் அதைச் கடந்துவிட முடியும்.
டைலர் கிரீன்இனிய திருமண வாழ்க்கை என்பது குறைகளுள்ள இரண்டு மனிதர்கள் என்ன நடந்தாலும் விட்டுக் கொடுக்காமல் காதலுடன் இருப்பது.
தெரியவில்லைநாம் ஒருவரையொருவர் திருமணம் செய்து கொள்ளாதது போல் வாழ்நாள் முழுவதும் ஒருவரையொருவர் நேசிப்போம் என்பதில் எனக்கு மிகுந்த நம்பிக்கை உள்ளது.
பைரன் பிரபுஒரு வெற்றிகரமான திருமண வாழ்விற்கு பலமுறை காதலில் விழுவது அவசியம் ஆனால் ஒரே நபருடன்.
மிக்னான் மெக்லாலின்திருமணத்தின் ஒரு நன்மை என்னவென்றால், நீங்கள் அவருடனான காதலில் இருந்து விலகும்போதோ அல்லது அவர் உங்களிடம் இருக்கும் காதலில் இருந்து விலகும்போதோ, நீங்கள் மீண்டும் காதலிக்கும் வரை அது உங்களை ஒன்றாக வைத்திருக்கும்.
ஜூடித் வியர்ஸ்ட்மகிழ்ச்சியான திருமணத்தின் ரகசியம் சரியான நபரைக் தேர்ந்தெடுப்பதே. நீங்கள் எப்போதும் அவர்களுடன் இருக்க விரும்பினால் அவர்கள் சொல்வது எப்போதும் சரிதான் என்பது உங்களுக்குத் தெரியும்.
ஜூலியா குழந்தைநல்ல திருமணம் என்று ஒன்று இருந்தால், அதற்கு காரணம் அது காதலை விட நட்பை ஒத்திருப்பதால் தான்.
மைக்கேல் டி மாண்டெய்ன்உங்கள் திருமணம் ஒரு புனித பந்தம் ஆனால் அதை எளிதென கருதாதீர்கள். எல்லா உறவுகளையும் போலவே அதை காக்க நீங்கள் தொடர்ந்து பாடுபட வேண்டும்.
ரேமண்ட் ஈடோதிருமணம் என்னை மிகவும் மகிழ்ச்சியாக ஆக்கியுள்ளது, நான் என் மனைவியை ஆழமாக காதலிக்கிறேன், அவளுக்காக ஒவ்வொரு நாளும் கடவுளுக்கு நன்றி கூறுகிறேன்.
ஹாரி கானிக், ஜூனியர்.காதலிக்கும் ஒரு மனிதன் திருமணம் ஆகும் வரை முழுமையடையாதவன். ஆன பின் அவன் கதை முடிந்தது.
ஸா ஸா கபோர்உண்மையான புரட்சியாளர் அன்பின் சிறந்த உணர்வுகளால் வழிநடத்தப்படுகிறார்.
சேகுவேராநீங்கள் ஒரு பூவை நேசித்தால், அதை பறிக்க வேண்டாம், ஏனெனில் நீங்கள் அதை பறித்தால், அது இறந்துவிடும், உங்களுக்கு அதன் மீதான ஆசையும் முடிந்துவிடும். எனவே நீங்கள் ஒரு பூவை நேசித்தால், அதை அப்படியே விட்டுவிடுங்கள். அன்பு என்பது உடைமையாக்கிகொள்வது பற்றியது அல்ல, அன்பு என்பது அப்படியே ஏற்றுக்கொள்வது.
ஓஷோதூய்மையான அன்பின் வெளிப்பாடு நட்பு.
ஓஷோஅன்பில் தேவைகள் இல்லை, ஆசைகள் இல்லை, எதிர்பார்ப்புகள் இல்லை. அன்பில் அன்பு மட்டுமே உள்ளது அப்படிப்பட்ட அன்பில்தான் அதில்தான் மகிழ்ச்சி பொங்கும்.
ஓஷோ