புத்தாண்டின் மிக அற்புதமான ஒளி எதிர்காலத்தை பற்றிய இனிமையான நம்பிக்கை!
பெஞ்சமின் பிராங்க்ளின்நமது வாழ்வின் சில சிறந்த நாட்கள் இன்னும் வரவில்லை என்பது எவ்வளவு அற்புதமான சிந்தனை!
எடித் லவ்ஜாய் பியர்ஸ்நாம் எப்போதும் நம்பிக்கையை தளரவிடாமல், மேலும் நல்லதை செய்ய முயற்சிக்க வேண்டும்.
கோஃபி அன்னான்இன்று நாம் கொள்ளும் நம்பிக்கை, நாளை நடக்கபோவதின் முன்னோட்டமே.
மிரா அல்பாசாமொத்த உலகமும் முடியாது என்று சொல்லும்போது, ‘ஒருவேளை முடியலாம்’ என்று மெல்லியதாக உங்களுக்கு கேட்கும் குரலே நம்பிக்கை.
ரோண்டா பைரன்நம்பிக்கை கொண்டவர்கள் ஒவ்வொரு பிரச்சனையிலும் வாய்ப்பையே காண்கிறார்கள், இல்லாதவர்கள் ஒவ்வொரு வாய்ப்பிலும் பிரச்சனைகளையே காண்கின்றனர்.
வின்ஸ்டன் சர்ச்சில்வெற்றி என்பது மகிழ்ச்சிக்கான திறவுகோல் அல்ல. மகிழ்ச்சியே வெற்றிக்காண சாவி. நீங்கள் செய்வதை நேசித்தால், வெற்றி பெறுவீர்கள்.
ஆல்பர்ட் ஸ்விட்சர்ஊக்கம் என்பது, உங்கள் கனவுகள் உழைப்பு எனும் ஆடையணியும் போது கிடைப்பது!
பெஞ்சமின் பிராங்க்ளின்உங்கள் அச்சங்களை கொண்டு அல்ல, உங்கள் நம்பிக்கைகளையும் கனவுகளையும் கொண்டு சிந்தியுங்கள். உங்கள் ஏமாற்றங்களைப் பற்றி அல்ல, உங்களின் கூர்மைப்படுத்தாத திறனைப் பற்றி சிந்தியுங்கள். நீங்கள் எதை முயற்சி தோற்றீர்கள் என்பதைப் பற்றி அல்லாமல், இன்னும் உங்களால் என்ன செய்ய முடியும் என்பதில் கவனம் செலுத்துங்கள்.
போப் ஜான் XXIIIநீண்ட காலத்திற்கு முன்பு, ஒரு பெரிய இலக்கை அடைய உறுதி பூண்டோம், அந்த தீர்மானத்தை நிறைவேறக்கூடிய நேரம் இப்போது வந்துவிட்டது.
ஜவஹர்லால் நேருமுற்றிலும் உடைந்திருக்கும் போது உங்களால் சிரிக்க முடிந்தால், அடுத்த முறை உங்களை உடைக்க எதுவும் இல்லை.
ஓஷோதன்னம்பிக்கை கொண்டிருந்த ஒரு சிலருடைய வரலாறே உலக சரித்திரமாகும். அத்தகைய நம்பிக்கை, உள்ளே இருக்கும் தெய்விகத்தை வெளியே வரவழைக்கிறது. நீ எதையும் சாதிக்க முடியும். அளவு கடந்த ஆற்றலை வெளிப்படுத்தப் போதுமான அளவிற்கு முயற்சி செய்யாத போது தான் தோல்வி அடைகிறாய். ஒரு மனிதனோ, ஒரு நாடோ தன்னம்பிக்கை இழந்த உடனே அழிவு வருகிறது.
சுவாமி விவேகானந்தர்