தோல்வி என்பது வெற்றிக்கு எதிரானதல்ல, அதுவும் வெற்றியின் ஒரு பகுதியே!
அரியானா ஹஃபிங்டன்உங்கள் தோல்விகள் உங்களை வரையறுக்க அனுமதிக்க முடியாது. உங்கள் தோல்விகள் உங்களுக்கு கற்பிக்க அனுமதிக்க வேண்டும்.
பராக் ஒபாமாதயாராவதற்கு தோல்வியடையும் போது, தோல்வியடைய தயாராகிவிடுகிறாய்!
பெஞ்சமின் பிராங்க்ளின்இழந்த இடத்தைப் பிடித்துக் கொள்ளலாம், ஆனால் இழந்தக் காலத்தை ஒருப்போதும் பிடிக்க முடியாது.
ஹென்றி ஃபோர்டுதோல்விக்கு இரண்டு காரணம், ஓன்று யோசிக்காமல் செய்வது, இரண்டு யோசித்த பின்னும் செய்யாமல் இருப்பது.
ஜான் வுட்டன்தோல்வி ஏற்றுக் கொள்ளத்தக்கது, எல்லோரும் ஏதோ ஒன்றில் தோற்கிறார்கள். ஆனால் முயற்சியின்மையை மட்டும் ஏற்றுக் கொள்ளவே முடியாது.
மைக்கேல் ஜோர்டன்நிலவுக்கு குறி வையுங்கள், ஒருவேளை நீங்கள் தோற்றாலும் நட்சத்திரங்களில் கால் பதிப்பீர்கள்.
நார்மன் வின்சென்ட் பீலேஇவ்வுலகில் மகிழ்ச்சியற்றவர்களாகவும், தோல்வியுற்றவர்களாகவும் இருப்பவர்கள் அனைவரும், ஒவ்வொரு செயலை செய்யும்போதும் "பிறர் என்ன நினைப்பார்கள்" என எண்ணக்கூடியவர்களே.
ஆஸ்கர் வைல்ட்எப்போதாவது முயற்சித்து தோல்வியடைந்திருக்கிறீர்களா? பரவாயில்லை, மறுபடியும் முயற்சியுங்கள், மறுபடியும் தோல்வியடையுங்கள், இன்னும் சிறப்பாக.
சாமுவேல் பெக்கெட்எடுத்த முயற்சியில் தோற்றாலும், நான் எடுத்தது சிறந்த முயற்சியே.
ஸ்டீவ் ஜாப்ஸ்தோல்விகளை எதிர்கொள்ள கற்றுக் கொள்ளுங்கள், அதுதான் வெற்றிக்கான மிக முக்கியமான வழி.
தாமஸ் ஆல்வா எடிசன்வெற்றியின் வாசல் தேடி வந்தவர்கள் நிச்சயம் ஆயிரம் தோல்விகளிடம் விலாசம் கேட்டு இருப்பார்கள்!
தாமஸ் ஆல்வா எடிசன்தோல்வியின் அடையாளம் தயக்கம், வெற்றியின் அடையாளம் துணிச்சல், துணிந்தவர் தோற்றதில்லை, தயங்கியவர் வென்றதில்லை!
ஜிக் ஜிக்லர்திருமண உறவில் தோல்வி காதலின்மையால்வருவதல்ல, நட்பின்மையால் வருவது.
ஃபிரெட்ரிக் நீட்சேஒன்று முக்கியமென்றால், தோல்விக்கே அதிக வாய்ப்பு என தெரிந்தாலும், அதை நீங்கள் செய்ய வேண்டும்!
எலான் மஸ்க்வாழ்க்கையின் மகத்துவம் தோற்காமலேயே இருப்பதில் இல்லை, தோற்கும் ஒவ்வொரு முறையும் திரும்ப எழுவதில்தான் உள்ளது.
நெல்சன் மண்டேலாவாழ்வதின் மிகப் பெரிய மகிமை ஒருபோதும் வீழாமல் இருப்பதில் இல்லை, ஒவ்வொரு முறை விழும்போதும் எழுவதில்தான்.
நெல்சன் மண்டேலாஉங்களால் முடியாது என்று நீங்கள் நினைக்கும் ஒன்றைச் செய்யுங்கள். தோல்வியுறுங்கள். மீண்டும் முயலுங்கள். இரண்டாவது முறை இன்னும் சிறப்பாகச் செய்யுங்கள். பெரிதாக அடிபடாதவர்கள் பெரும் சிகரங்களில் ஏறாதவர்களே. இது உங்கள் தருணம். அதை சொந்தமாக்கி கொள்ளுங்கள்.
ஓப்ரா வின்ஃப்ரேதோல்வியை ஒப்புக்கொள்ளத் தயங்காதே, தோல்வியிலிருந்து கற்றுக்கொள்ள நிறைய இருக்கின்றன.
லெனின்வெற்றி என்பது மகிழ்ச்சிக்கான திறவுகோல் அல்ல. மகிழ்ச்சியே வெற்றிக்காண சாவி. நீங்கள் செய்வதை நேசித்தால், வெற்றி பெறுவீர்கள்.
ஆல்பர்ட் ஸ்விட்சர்தோல்வி உன்னை துரத்துகிறது என்றால் வெற்றியை நீ நெருங்குகிறாய் என்று பொருள்!
நெப்போலியன் பொனபார்ட்தோல்வியிலும், தொடர் முயற்சியை மேற்கொள்பவர்களுக்கே வெற்றி சாத்தியம்.
நெப்போலியன் பொனபார்ட்வெற்றி இறுதியுமல்ல, தோல்வி முடிவுமல்ல. தொடர்வதன் துணிவே பெரிது.
வின்ஸ்டன் சர்ச்சில்வெற்றி பெற வேண்டும் என்ற உறுதி எனக்கு வலுவாக இருந்தால் தோல்வி என்னை ஒருபோதும் வெல்ல முடியாது.
ஓக் மண்டினோஇங்கு தோல்வி மிக அதிகமாக மதிப்பிடப்படுகிறது, ஆனால் தோல்வி என்பது பகுத்தறிவுக்கு ஒவ்வாத ஒரு கட்டுக்கதை.
பீட்டர் தியேல்ஒன்றும் செய்யாமல் வெற்றி பெறுவதை விட பெரிதாக ஒன்றை செய்து தோல்வியடைவதையே விரும்புகிறேன்.
ராபர்ட் ஷுல்லர்தோல்வியின் ஆபத்திற்கு நீங்கள் கொடுக்கும் விலை, முயற்சினையின்மையின் துயரத்தைவிட குறைவானதாகவே இருக்கும்.
ராபின் ஷர்மாவெற்றி எனும் உணவில் சேர்க்கப்படும் மிகச்சிறந்த சுவையூட்டி தோல்வி.
ட்ரூமன் கபோட்வெற்றியாளர்கள் தோல்வியை எற்றுகொண்டதில்லை, எற்றுக்கொள்பவர்கள் வெல்வதில்லை.
வின்ஸ் லோம்பார்டிமுதல் வெற்றிக்குப் பிறகு ஓய்வெடுக்காதீர்கள், அதற்கு பிறகு நீங்கள் தோற்றால், உங்கள் முதல் வெற்றி அதிர்ஷ்டத்தால் வந்தது என்று சொல்ல நிறைய உதடுகள் காத்திருக்கின்றன.
ஆ.ப.ஜெ.அப்துல் கலாம்வெற்றிக் கதைகளைப் படிக்காதீர்கள், வெற்றியை பற்றி உங்களால் அறிய மட்டுமே முடியும். தோல்விக் கதைகளைப் படியுங்கள், வெற்றியைப் பெற சில வழிகளையும் காணமுடியும்.
ஆ.ப.ஜெ.அப்துல் கலாம்கனவு காண்பவர்கள் அனைவருமே தோற்பதில்லை, கனவு மட்டுமே காண்பவர்கள் தோற்கிறார்கள்.
ஆ.ப.ஜெ.அப்துல் கலாம்