எவனொருவன் தானே சரணடையாமல், மற்றவர்களின் இச்சைப்படி செயல்படாமல், எதனையும் சோதனைக்குட்படுத்தி அறிவு வெளிச்சத்தில் அலசி ஏற்கின்றானோ அவனே சுதந்திர மனிதன்.
அம்பேத்கர்மற்றவர்களுக்கெல்லாம் எதிரி ஏகாதிபத்தியம். ஆனால், தாழ்த்தப்பட்ட மக்கள் தங்களைச் சுற்றிப் பல்வேறு எதிரிகளால் சூழப்பட்டுள்ளதால், எல்லோரையும் ஒரே நேரத்தில் எதிர்க்க முடியாது; எனவே, 2,000 ஆண்டுகளாக உயர் சாதி இந்துக்களால் இழைக்கப்படும் கொடுமைகளுக்கும் அடக்குமுறைகளுக்கும் எதிராகப் போரிடுவது என முடிவெடுத்தேன்.
அம்பேத்கர்புரட்சி என்பது மனிதகுலத்தின் மறுக்கப்பட முடியாத உரிமை. சுதந்திரம் என்பது யாருக்கும் மறுக்கப்பட முடியாத பிறப்புரிமை.
பகத் சிங்ஆசையினால் உந்தப்பட்ட மனிதர்கள், வேட்டையில் விரட்டப்பட்ட முயலைப் போல், ஓடித் திரிகிறார்கள். ஆதலால், மோக பந்தங்களிலிருந்து விடுதலை பெற விரும்பும் பிக்கு ஆசையை ஒழிப்பானாக.
புத்தர்ஆங்கிலேயர்களின் ஆதிக்கத்திலிருந்து நம் இந்தியத் திருநாடு விடுதலை பெற்ற இந்த இனிய நாளில், நாட்டு மக்கள் அனைவருக்கும் எனது உளம் கனிந்த சுதந்திர தினத் திருநாள் நல்வாழ்த்துகளை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
ஜெ.ஜெயலலிதாஆங்கிலேயர்களின் ஆதிக்கத்திலிருந்து நம் இந்தியத் திருநாடு விடுதலை பெற்ற இந்த இனிய நாளில், நாட்டு மக்கள் அனைவருக்கும் எனது உளம் கனிந்த சுதந்திர தினத் திருநாள் நல்வாழ்த்துகளை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
ஜெ.ஜெயலலிதாவிடுதலை உணர்வின் மிகவும் திருப்திகரமான வடிவம் பொறுப்புகளே இல்லாத வாழ்க்கை அல்ல, மாறாக, உங்கள் பொறுப்புகளை நீங்களே தேர்ந்தெடுப்பதற்கான வாய்ப்பிருக்கும் வாழ்க்கையே ஆகும்.
ஜேம்ஸ் கிளியர்சொர்க்கத்தில் என்னைச் சிறை வைத்தாலும், நான் அதன் பளிங்குச் சுவர்களைத் தாண்டி வெளியேறவே விரும்புவேன், எனக்குச் சுதந்திரமே தேவை.
ஜான் டிரைடன்சுதந்திரமான வாழ்க்கை என்பது யாருக்கும், எதற்கும் கட்டுப்படாத வாழ்க்கையென்று பொருள் அல்ல, பிறரிடம் எதையும் எதிர்பார்த்து யாசிக்காத வாழ்க்கையே சுதந்திரமான வாழ்க்கை.
காமராசர்சுதந்திரத் திருநாளில் சாதி, மத, இன, மொழி வேறுபாடுகளுக்கு இடம் கொடாமல் ஒன்றுபட்டு நின்று சுதந்திரத்தின் பயன் முழுவதும் நாட்டுக்கு மக்களுக்குத் தொடர்ந்து கிடைத்திட அனைவரும் உறுதியேற்று உழைப்போம்.
மு. கருணாநிதிஇந்தியா இந்துக்களின் நாடு மட்டுமல்ல. இது முஸ்லீம்கள், கிறிஸ்தவர்கள், பார்சிகளின் என அனைவருக்குமான நாடு.
மதன் மோகன் மாளவியாசுதந்திரம் பிறப்பை போன்றது. முழு சுதந்திரம் கிடைக்கும் வரை நாம் அடிமைகள்தான்.
மகாத்மா காந்திசுதந்திரம் விலையில்லை. அது உயிர் மூச்சு. ஒரு மனிதன் வாழ்வதற்கு என்ன கொடுக்க மாட்டான்?
மகாத்மா காந்திதவறு செய்யும் சுதந்திரம் இல்லையென்றால் சுதந்திரம் மதிப்புக்குரியது அல்ல.
மகாத்மா காந்திஇனி அடிமையாக இருக்கமாட்டேன் என்று தீர்மானிக்கும் தருணத்தில், அவனுடைய கட்டுகள் அவிழ்கின்றன.
மகாத்மா காந்திஜனநாயக உணர்வை வெளியில் இருந்து திணிக்க முடியாது. அது உள்ளிருந்து வர வேண்டும்.
மகாத்மா காந்திஎனது நாட்டுப்பற்று எனது நாட்டுக்கு மட்டுமே உரித்தானதல்ல. அது பிற நாடுகளுக்கான மதிப்பையும் உள்ளடக்கியது. பிற தேசியங்கள் துன்பத்துக்குள்ளாகவும், ஒடுக்கப்படவும் என் தேசபக்தி பயன்படுமானால் அதை நான் நிராகரிக்கிறேன்.
மகாத்மா காந்திநம் எதிரி பயமே. வெறுப்பை நாம் எதிரியாக நினைக்கிறோம், ஆனால் உண்மையில் பயமே எதிரி.
மகாத்மா காந்திசுதந்திரம் என்பது பொறுப்புகளற்ற தன்மை அல்ல, எனக்கு தேவையானதை தேர்ந்தெடுத்து அதன் பொறுப்புகளை ஏற்பதே சுதந்திரம்.
பாலோ கோயல்ஹோவிடுதலையான இந்தியாவை காண நம்மில் யார் இருக்கப்போவது என்பது முக்கியம் அல்ல, இந்தியா விடுதலை அடைந்தால் போதும். அதற்காக நம்மிடம் உள்ள அனைத்தையும் அர்பணிப்போம்.
சுபாஷ் சந்திர போஸ்எனக்கு உதிரத்தைக் கொடுங்கள், சுதந்திரத்தை உங்களுக்கு நான் தருகிறேன்!
சுபாஷ் சந்திர போஸ்நமது வரலாற்றில் இனி ஒருபோதும் நமது சுதந்திரத்தை இழக்காத வகையில் அசைக்க முடியாத அடித்தளத்துடன் கூடிய நமது தேசப் பாதுகாப்பை நாம் கட்டியெழுப்ப வேண்டும்.
சுபாஷ் சந்திர போஸ்ஆடுவோமே பள்ளுப் பாடுவோமே ஆனந்த சுதந்திரம் அடைந்துவிட்டோம் என்று.
சுப்ரமணிய பாரதிவீர சுதந்திரம் வேண்டி நின்றார் பின்னர் வேறொன்று கொள்வாரோ? - என்றும் ஆரமுது உண்ணுதற்கு ஆசைகொண்டார் கள்ளில் அறிவைச் செலுத்து வாரோ?
சுப்ரமணிய பாரதிதண்ணீர் விட்டோ வளர்த்தோம்? சர்வேசா! இப்பயிரைக் கண்ணீரால் காத்தோம்.
சுப்ரமணிய பாரதிஎன்று தணியும் இந்தச் சுதந்திர தாகம்? என்று மடியும் எங்கள் அடிமையின் மோகம்?
சுப்ரமணிய பாரதிவிடுதலை ! விடுதலை ! விடுதலை ! பறைய ருக்கும் இங்கு தீயர், புலைய ருக்கும் விடுதலை, பரவ ரோடு குறவ ருக்கும் மறவ ருக்கும் விடுதலை!
சுப்ரமணிய பாரதிசுதந்திர தேவி! நின்னைத் தொழுதிடல் மறக்கிலேனே
சுப்ரமணிய பாரதிகலை, சுதந்திரம் மற்றும் படைப்பாற்றல் ஆகியவை அரசியலை விட சமுதாயத்தை வேகமாக மாற்றிவிடும்.
விக்டர் பிஞ்சுக்ஜனநாயகம் நல்லது. இதைச் சொல்வதன் காரணம், மற்ற அமைப்புகள் மிக மோசமாக இருப்பதே.
ஜவஹர்லால் நேருபோராடாமல் சுதந்திரம் கிடைக்கும் என்று நம்புவதற்கு நமக்கு உரிமை இல்லை.
சேகுவேராசுதந்திரம் கொடுக்கப்படவில்லை, எடுத்துக்கொள்ளப்பட்டது.
ஜவஹர்லால் நேருசுதந்திரமும் அதிகாரமும், பொறுப்பையும் சேர்த்தே கொண்டது.
ஜவஹர்லால் நேருநம் நாட்டுக்கு சுதந்திரம் தேவை, ஆனால் பிறர் சுரண்டபடுவதின் மூலம் அது நமக்கு கிடைக்க தேவையில்லை.
ஜவஹர்லால் நேருநீண்ட காலத்திற்கு முன்பு, ஒரு பெரிய இலக்கை அடைய உறுதி பூண்டோம், அந்த தீர்மானத்தை நிறைவேறக்கூடிய நேரம் இப்போது வந்துவிட்டது.
ஜவஹர்லால் நேருஇரவின் பிடியிலுள்ள இத்தருணத்தில் உலகம் உறங்கும் நேரத்தில், விடுதலையோடு இந்தியா விழிக்கிறது.
ஜவஹர்லால் நேருகற்றலுக்கும், சிந்திப்பதற்கும், கற்பனை செய்வதற்குமான சுதந்திரம் தேவை, அவற்றை ஆசிரியர்களே மாணவர்களுக்கு வழங்க முடியும்.
ஆ.ப.ஜெ.அப்துல் கலாம்சட்டம், ஒழுங்கு என்பது பிற்போக்குவாதியின், கொடுங்கோல் அரசனின், அதிகாரத்தை வைத்துக்கொண்டு அதை விட்டுக்கோடுக்க மறுப்பனின் கடைசி புகலிடம்; சுதந்திரம் கிடைக்கும்வரை சட்டமும் ஒழுங்கும் இருக்க முடியாது.
ஜவஹர்லால் நேருபடைப்பாற்றல் உங்களுக்குள் இருக்கும் மிகப்பெரிய புரட்சி.
ஓஷோஉலகம் முழுவதும் என்ன நடக்கிறது என்பதைப் பற்றி விவாதித்தும் கருத்துக்களைப் பரிமாறிக் கொண்டும், நமது இளைஞர்கள் எப்போதும் சுதந்திரமாக இருக்க வேண்டும்.
சேகுவேராநீங்கள் ஒரு பூவை நேசித்தால், அதை பறிக்க வேண்டாம், ஏனெனில் நீங்கள் அதை பறித்தால், அது இறந்துவிடும், உங்களுக்கு அதன் மீதான ஆசையும் முடிந்துவிடும். எனவே நீங்கள் ஒரு பூவை நேசித்தால், அதை அப்படியே விட்டுவிடுங்கள். அன்பு என்பது உடைமையாக்கிகொள்வது பற்றியது அல்ல, அன்பு என்பது அப்படியே ஏற்றுக்கொள்வது.
ஓஷோ