எனக்கு என்ன நடந்தது என்பது 10 சதவீதமும், அதை நான் எப்படி எதிர்கொண்டேன் என்பது 90 சதவீதமும் கொண்டதுதான் வாழ்க்கை.
சார்லஸ் ஸ்விண்டால்தைரியத்தின் அடிப்படையிலேயே ஏறக்குறைய ஒரு முரண்பாடு உள்ளது. அது, வாழ்வதற்கான ஒரு வலுவான ஆவல் சாவதற்கும் துணிவதிலேயே உள்ளது.
ஜி கே செஸ்டர்டன்வாழ்க்கை என்பது வாய்ப்புகளால் நிரம்பியது, நாம் பயன்படுத்தும் வாய்ப்பை பொறுத்தே நம் வாழ்க்கை அமையும்.
ஜான் எஃப் கென்னடிநீங்கள், மற்றதை திட்டமிட்டுக் கொண்டிருக்கும்போது நடப்பதே வாழ்க்கை.
ஜான் லெனான்சுதந்திரமான வாழ்க்கை என்பது யாருக்கும், எதற்கும் கட்டுப்படாத வாழ்க்கையென்று பொருள் அல்ல, பிறரிடம் எதையும் எதிர்பார்த்து யாசிக்காத வாழ்க்கையே சுதந்திரமான வாழ்க்கை.
காமராசர்சுதந்திரம் விலையில்லை. அது உயிர் மூச்சு. ஒரு மனிதன் வாழ்வதற்கு என்ன கொடுக்க மாட்டான்?
மகாத்மா காந்திகாதல் உங்களுடன் வாழ ஒருவரை கண்டுபிடிப்பதல்ல. அவர் இல்லாமல் நீங்கள் வாழமுடியாத ஒருவரை கண்டுபிடிப்பது.
மொண்டனீஸ் ரபேல் ஒர்டிஸ்அபாயங்களை எதிர்கொள்ள தைரியம் இல்லாதவன் வாழ்க்கையில் எதையும் சாதிக்க மாட்டான்.
முகம்மது அலி20 வயதில் பார்த்ததைப் போலவே 50 வயதில் உலகைப் பார்க்கும் ஒரு மனிதன் தனது வாழ்நாளின் 30 வருடங்களை வீணடித்துவிட்டான்.
முகம்மது அலிஒவ்வொரு நாளையும் கடைசி நாள் போல வாழுங்கள். ஏனெனில், ஒருநாள் அது உண்மையாகும்.
முகம்மது அலிஉங்களின் மிகப்பெரிய ஆயுதம் வாழ்வதற்கான உங்கள் விருப்பம். அந்த ஆயுதத்தை எப்போதும் உங்களுடன் வைத்திருங்கள்.
நார்மன் கசின்ஸ்உங்கள் வாழ்க்கையின் எந்த சூழலிலும் முடியாதென்று எதுவும் கிடையாது என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
ஆர். மாதவன்வாழ்க்கை என்பது பயணம் இலக்கு அல்ல.
ரால்ப் வால்டோ எமர்சன்உங்கள் நேரம் வரையரைக்குட்பட்டது, பிறருக்காக வாழ்ந்து அதை வீணாக்காதீர்கள்.
ஸ்டீவ் ஜாப்ஸ்வாழ்க்கையின் மகத்துவம் தோற்காமலேயே இருப்பதில் இல்லை, தோற்கும் ஒவ்வொரு முறையும் திரும்ப எழுவதில்தான் உள்ளது.
நெல்சன் மண்டேலாவாழ்வதின் மிகப் பெரிய மகிமை ஒருபோதும் வீழாமல் இருப்பதில் இல்லை, ஒவ்வொரு முறை விழும்போதும் எழுவதில்தான்.
நெல்சன் மண்டேலா"வாழ்ந்தேன்" என்பதற்கான சாட்சியை பதிவு செய்யுங்கள்.
சமுத்திரக்கனிஎன்னால் மட்டுமே என் வாழ்க்கையை மாற்ற முடியும். எனக்காக இன்னொருவர் அதை செய்ய முடியாது.
கரோல் பர்னெட்வாழ்க்கை என்பது உங்களை நீங்களே தேடுவதில்லை, உங்களை நீங்களே உருவாக்குவது.
பெர்னார்ட் ஷாஉற்சாகமாக இருக்கத் தொடங்குவதுதான் வெற்றிகரமான வாழ்க்கை வாழத் தொடங்குவதற்க்கான முதல் அறிகுறி!
சுவாமி விவேகானந்தர்உற்சாகமாக இருக்கத் தொடங்குவதுதான் வெற்றிகரமான வாழ்க்கை வாழத் தொடங்குவதற்க்கான முதல் அறிகுறி!
சுவாமி விவேகானந்தர்உன் வாழ்க்கையின் எந்த ஒரு நாளில் உன் முன்னால் எந்தப் பிரச்சினையையும் நீ சந்திக்காமல் முன் செல்கிறாயோ, அப்பொழுது தவறான பாதையில் நீ பயணிக்கிறாய் என்று அறிவாய்.
சுவாமி விவேகானந்தர்பலமே வாழ்வு; பலவீனமே மரணம்
சுவாமி விவேகானந்தர்பெண்கள் சமூகத்தில் முக்கிய பங்கு வகிக்கின்றனர். வாழ்க்கையின் அனைத்து அம்சங்களிலும் முழுமையாக பங்கேற்க வாய்ப்பும் வழங்கப்பட வேண்டும்
ஜவஹர்லால் நேருவாழ்வும் சாவும், நன்மையும் தீமையும், அறிவும் அறியாமையும் ஆன கலவைதான் மாயை, அதாவது பிரபஞ்சத்தின் இயல்பு. இந்த மாயையில் நீ எல்லையற்ற மகிழ்ச்சிக்காக அலையலாம், ஆனால் நீ தீமையையும் காண்பாய். தீமையின்றி நன்மை இருக்குமென்பது சிறுபிள்ளைதனம்.
சுவாமி விவேகானந்தர்