எதிரிகள் தாக்கித் தாக்கி தங்கள் வலுவை இழக்கட்டும், நீங்கள் தாங்கித் தாங்கி வலுவைப் பெற்றுக்கொள்ளுங்கள்.
சி.என்.அண்ணாதுரைஅரிய செயலைச் செய்து முடிப்பது வலிமையால் அல்ல, விடாமுயற்சியால்.
ஜேம்ஸ் ஆலன்உழைப்பதற்கு அஞ்சாதவர்களே எதிர்காலத்தில் வலிமை மிக்க மனிதர்களாகத் மாறுகிறார்கள்!
தெரியவில்லைநம் திறன்களைத் திறப்பதற்கான சாவி தொடர் முயற்சிதானே தவிர, வலிமையோ அறிவு கூர்மையோ அல்ல.
வின்ஸ்டன் சர்ச்சில்எல்லாம் போய்விட்டாலும் வலிமையான உள்ளமிருந்தால், உலகத்தையே கைப்பற்றலாம்.
காமராசர்வலிமை உடல் பலத்தால் வருவதல்ல, வெல்லமுடியாத வேட்கையினால் வருவது.
மகாத்மா காந்திஆற்று நீர் பெரும் பாறையும் உடைப்பது, அதன் வலிமையால் அல்ல, விடாமுயற்சியினால்!
தெரியவில்லைஎவரெஸ்ட் சிகரத்தின் உச்சியானாலும் உங்கள் வாழ்க்கை சிகரத்தின் உச்சியானாலும், உச்சத்தை எட்ட வலிமை வேண்டும்.
ஆ.ப.ஜெ.அப்துல் கலாம்நோக்கம் எது என்பதை முதலில் தீர்மானி. அதுவே இலக்கு என்பதை உறுதிசெய்து கொள். கையில் பணம் இல்லையே, உடலில் வலு இல்லையே, உதவி செய்ய நண்பர்கள் இல்லையே என்றெல்லாம் யோசித்து நேரத்தை வீணாக்காதே! எதற்கும் பயப்படாதே, தயங்காதே. இலக்கை நோக்கி அடியெடுத்து வை. தொடர்ந்து முன்னேறு, சோதனைகள் விலகும். பாதை தெளிவாகும். நோக்கத்தை அடைந்தே தீருவாய்! அதை யாராலும் தடுக்க முடியாது.
சுவாமி விவேகானந்தர்தாமரை இலையில் நீர் போல வாழ்வில் எதிர்மறை தாக்கங்களை தொட விடாதீர்கள்.
ஓஷோஇந்த உலகம் மிகப்பெரிய ஓர் உடற்பயிற்சிக் கூடம். இங்கு நாம் நம்மை வலிமையுடவர்களாக மாற்றிக் கொள்வதற்காக வந்திருக்கிறோம்.
சுவாமி விவேகானந்தர்நாம் கடினப்பட்டு வேண்டும் அதற்காக நம் இரக்க குணத்தை விட்டுவிடக்கூடாது.
சேகுவேரா