ஒரு தலைமுறைக்கு பள்ளியில் என்ன கற்பிக்கிறோமோ, அதுவே அடுத்த தலைமுறை சமூகத்தில் பிரதிபலிக்கும்.
ஆபிரகாம் லிங்கன்கடந்த காலத்தில் அப்படி இருந்துவிட்டோமே என்று கவலைப்படாத ஒருவரும் போதுமான அளவு கற்பதில்லை என்பதே உண்மை.
அலைன் டி போட்டன்அறிவின் அடையாளம் கல்வி அல்ல, கற்பனையே.
ஆல்பர்ட் ஐன்ஸ்டீன்கல்வி என்பது தகவல்களை சேகரிப்பதல்ல, அது சிந்ததிப்பதற்காக மூளையை பயிற்றுவிப்பது.
ஆல்பர்ட் ஐன்ஸ்டீன்கேள்வி கேட்பதை நிறுத்ததாமல் இருப்பதே முக்கியம்; ஆர்வம் காரணம் இல்லாமல் வருவதில்லை.
ஆல்பர்ட் ஐன்ஸ்டீன்நான் இன்று வாழ்வதற்கு என் தந்தைக்கு கடமைப்பட்டிருக்கிறேன், ஆனால் நன்றாக வாழ்வதற்கு என் ஆசிரியருக்கே கடமைப்பட்டுள்ளேன்.
மாவீரன் அலெக்ஸ்சாண்டர்சிறந்த ஆசிரியர்கள் எங்கு பார்க்க வேண்டும் என்று சொல்வார்கள், ஆனால் எதைப் பார்க்க வேண்டும் என்று சொல்ல மாட்டார்கள்.
அலெக்ஸாண்ட்ரா கே. ட்ரென்ஃபோர்கல்வியின் வேர்கள் கசப்பானவை, ஆனால் பழம் இனிப்பானது.
அரிஸ்டாட்டில்கல்வி என்பது செழுமையில் ஆபரணம், துன்பங்களில் அடைக்கலம்.
அரிஸ்டாட்டில்கண்டுபிடிப்பாளர்கள் சாதாரண மனிதர்களே, ஆனால் அவர்கள் தாங்கள் கற்ற கல்வியை பற்றி அதிகம் கவலைப்படாதவர்கள்.
சார்லஸ் எஃப் கெட்டரிங்கல்வி என்னைக் கரை மட்டும் சேர்க்கவில்லை, நிலவு வரை சென்று சேர்த்திருக்கிறது. அரசுப் பள்ளியில், தமிழ் வழியில் படித்துத்தான் முன்னேறி இருக்கிறேன். தமிழ் எனக்குத் தடையாக இருந்தது இல்லை, படியாகவே இருக்கிறது. தமிழால் முடியும், தமிழரால் முடியும்.
மயில்சாமி அண்ணாதுரைசொல்லில் உயர்வு தமிழ்ச் சொல்லே அதைத் தொழுது படித்தடடி பாப்பா.
சுப்ரமணிய பாரதிஒரு புரட்சியாளரின் முதல் கடமை கல்வியறிவு பெறுவதே.
சேகுவேராஎந்த நாட்டிற்கும் முதுகெலும்பு ஆசிரியர்களே, நாட்டின் அனைத்து இலக்குகளையும் வெற்றி அடையச் செய்யும் தூண்கள் அவர்கள்.
ஆ.ப.ஜெ.அப்துல் கலாம்ஆசிரியப்பணி என்பது ஒரு தனிநபரின் தன்மை, திறன் மற்றும் எதிர்காலத்தை வடிவமைக்கும் மிகவும் உன்னதமான தொழில். மக்கள் என்னை ஒரு நல்ல ஆசிரியராக நினைவு கூர்ந்தால் அதுவே எனக்குக் கிடைத்த மிகப்பெரிய கவுரவமாக இருக்கும்.
ஆ.ப.ஜெ.அப்துல் கலாம்திறமையும், நிபுணத்துவமும் கொண்ட நல்ல மனிதர்களை உருவாக்குவதே கல்வியின் நோக்கம். அறிவொளி பெற்ற மனிதர்களை ஆசிரியர்களால் உருவாக்க முடியும்.
ஆ.ப.ஜெ.அப்துல் கலாம்கல்வி முன்னேற்றத்தின் திறவுகோல். கற்றவர்களுக்கே உற்பத்தித்திறனும் சமுதாயதிற்கு பங்காற்றும் வாய்ப்பும் அதிகம்.
ஜவஹர்லால் நேருகல்வி என்பது அறிவை பெறுதல் மட்டுமல்ல. விமர்சனங்களை ஏற்கும் சிந்தனை திறனும் சமூக பொறுப்புணர்வையும் சேர்த்தது அது.
ஜவஹர்லால் நேருகல்வி என்பது ஒரு மனிதனுக்கு கற்பிக்கப்பட வேண்டிய அவசியமெல்லாம், அவன் தன் வாழ்நாளில் சுதந்திரத்தோடு வாழ்வதற்கு தகுதிப்படுத்தவே!
பெரியார்கல்வி அறிவும், சுயமரியாதை எண்ணமும், பகுத்தறிவு தன்மையுமே தாழ்ந்து கிடக்கும் மக்களை உயர்த்தும்.
பெரியார்பகுத்தறிவுக்கு மாறானதும், மூட நம்பிக்கையை வளர்ப்பதுமான எந்த செய்தியும் கல்வியில் பாடமாக கற்பிக்கக் கூடாது.
பெரியார்எவ்வளவு பெரிய கல்வியும், ஒரு கலையாகவும் தொழிலாகவும் போய்விட்டதேயல்லாமல் பகுத்தறிவுக்கு ஒரு சிறிதும் பயன்படுவதாக இல்லை.
பெரியார்படைப்பாற்றல் என்பது எதிர்கால வெற்றிக்கான திறவுகோலாகும், ஆரம்பக் கல்வியிலேயே ஆசிரியர்களால் குழந்தைகளிடம் அந்த படைப்பாற்றலைக் கொண்டு வர முடியும்.
ஆ.ப.ஜெ.அப்துல் கலாம்கல்வி என்பது உண்மைக்கான ஒரு தேடலே. அறிவு, ஞானத்தின் வழியிலான முடிவற்ற பயணம் அது.
ஆ.ப.ஜெ.அப்துல் கலாம்உண்மையான கல்வி ஒரு மனிதனின் கண்ணியத்தை மேம்படுத்தி சுயமரியாதையை கூட்டுகிறது. கல்வியின் உண்மையான உணர்வை ஒவ்வொரு தனிமனிதனும் உணர்ந்து, ஒவ்வொரு துறையிலும் செயல்படுத்த முடிந்தால், உலகம் வாழ்வதற்கு மிகச் சிறந்த இடமாக இருக்கும்.
ஆ.ப.ஜெ.அப்துல் கலாம்எழுதவும் படிக்கவும் தெரியாத ஒரு நாட்டை ஏமாற்றுவது எளிது.
சேகுவேராஏழைச் சிறுவன் கல்வியை நாடி வர முடியாவிட்டால் கல்விதான் அவனை நாடிப் போக வேண்டும்.
சுவாமி விவேகானந்தர்